கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

கடந்த 2016-ஆம் ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார் ரம்யா பாண்டியன். அதனைத்தொடர்ந்து, தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி ஜோடியாக ’ஆண் தேவதை’ படத்தில் நடித்தார். சினிமாவில் தனக்கென சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர், விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’, ’பிக்பாஸ்’ நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றார்.

தற்போது சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து வருபவர் இன்று கொரோனா தடுப்பூசியை காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

image

கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் எவரும் பெரிதாக முன்வரவில்லை. ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ரம்யா பாண்டியனும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Author: sivapriya