’நேத்து ஓரக்கண்ணில் நான்.’ – சனாவின் இசையில் தனுஷின் குரலில் வெளியானது வீடியோ பாடல்

ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலிருந்து ‘நேத்து’ பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து தனுஷ் எழுதி பாடியிருக்கும் ‘நேத்து ஓர கண்ணில் நான் உன்னை பார்த்தேன்’ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலில் கதாநாயகன் கதாநாயகியுடன் நெருங்க முயற்சிப்பதும், அதை நாயகி எச்சரிக்கையுடன் எதிர்கொள்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சந்தோஷ் நாரயணனின் இசையில் வெளியாகி இந்தப்பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வரவேற்பைபெற்று வருகிறது.

முன்னதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக படம் தள்ளிப்போனது. இதனால், ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனைத்தொடர்ந்து படம் ஜூன் 18-ல் நேரடியாக நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே படத்தின் டீஸரும், ’புஜ்ஜி’ என்ற பாடலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 17 மொழிகளில் ஜகமே தந்திரம் படம் டப் செய்து வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Author: sivapriya