தமிழகத்தில் முழு ஊரடங்கை 2 வார காலம் நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவிவரும் நிலையில் கடந்த 10ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் 19 பேர்கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம் நிறைவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குழுவினர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் முதல்வர் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுடனும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டபிறகு இன்று மாலை இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya