வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சியை தொடங்க அனுமதி

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவப் பணி என்ற விதியும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின் போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியும் அமலில் உள்ளது. இந்நிலையில், ரூ.5 லட்சம் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு பயிற்சியை தொடங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

image

பயிற்சியின்போது கொரோனா தொற்று பரவலுக்கும் சிகிச்சை அளிக்க இந்த உத்தரவு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் தேவை கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya