கொரோனா: ஆயுஷ் அமைச்சகம் சார்பில் ஹெல்ப்லைன் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

14443 என்ற ஹெல்ப்லைன் மூலம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு அளித்து வருகின்றனர். இந்த வல்லுநர்கள், நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

தற்போது இந்தியிலும், ஆங்கிலத்திலும் வழங்கப்படும் ஆலோசனை விரைவில், பிற மொழிகளிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆயுஷ் அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்குகிறது.

Author: sivapriya