மத்திய அரசு திட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சைபெற வழிவகை செய்யவேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தாக்கிவருகிறது. ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்ற மருத்துவர்களின் கருத்தை ஏற்று, இந்தியாவில் கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சைபெற வழிவகை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஆம்போடெரிசின் -பி மருந்தை உரிய அளவில் தயாரித்து மாநிலங்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Author: sivapriya