உலக அளவில் 16.64 கோடி பேருக்கு கொரோனா; 34.56 லட்சம் பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.64 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 14.72 பேர் பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,64,54,364 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 15,781,667 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 98,182 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் நான்காவது இடத்திலும் துருக்கி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Author: sivapriya