தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயங்கும்

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திங்கட்கிழமையிலிருந்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya