55 வயதிலும் கட்டுக்கோப்பான உடற்கட்டு – டயட் பட்டியலை வெளியிட்ட மிலிந்த் சோமன்..

நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டயட் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் மாடலும் நடிகருமான மிலிந்த் சோமனும் ஒருவர். அடிப்படையில் பிட்னஸ் ஆர்வலரான அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிருவதும், ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் ரசிகர்கள் பலர் அவரிடம் அவரது தினசரி டயட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது தனது டயட் பட்டியலை மிலிந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரின் டயட் ப்ளான்:-

காலை எழுந்த உடன் 500 மிலி தண்ணீர் ( அறையின் வெப்பநிலையில்)

காலை உணவு ( 10 மணி அளவில்) – சில நட்ஸ், ஒரு பப்பாளி, ஒரு முலாம்பழம், இது மட்டுமல்லாம அந்தந்த சீசன்ல கிடைக்கக்கூடிய பழங்கள் இருக்கும்.

image

மதிய உணவு ( 2 மணியளவில்) – பெரும்பாலும் அரிசி உணவும், டால் கிச்சடியும் அதுக்கூட சீசனல் காய்கறிகள் இருக்கும். அந்த உணவோட விகிதம் ஒரு பங்கு அரிசி உணவு, 2 பங்கு காய்கறிகள் என இருக்கும். கூடவே வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெய்யும் இதில் அடங்கும்.

ஒரு வேளை அரிசி உணவு இல்லையென்றால் 6 சப்பாத்தி, காய்கறிகள் கூடவே டாலும் இருக்கும். சிக்கன், மட்டன், முட்டையெல்லாம் மாதத்திற்கு ஒரு முறைதான்.

5 மணிக்கு, சில நேரங்களில் வெல்லம் சேர்த்து ஒரு கப் பிளாக் டீ.

இரவு உணவு – (7 மணியளவில்) – காய்கறிகள் அல்லது பாஜி, ரொம்பபசியா இருந்தா கிச்சடி. இரவு அசைவ உணவுக்கு அனுமதி கிடையாது.

தூங்கப்போறதுக்கு முன்னாடி வெந்நீரில் கொஞ்சம் வெல்லம், மஞ்சள் சேர்த்து குடிப்பேன்.

இனிப்பு தேவைப்படும் போதெல்லாம் அந்த இடத்தில் வெல்லம்தான் இருக்கும்.

image

முடிந்தவரை பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவேன். உணவைத்தாண்டி எந்த சப்ளிமெண்டையும் எடுத்துக்கொள்வதில்லை அதில் வைட்டமின் மாத்திரைகளும் அடங்கும்.

அதேபோல குளிர்ச்சியான தண்ணீருக்கும், குளிர்பானங்களுக்கும் எனது டயட்டில் இடம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மது அருந்துவது உண்டு அதுவும் ஒரு கிளாஸ்தான்.

ஊரடங்கிலும் இதே பார்மெட்தான். தற்போது ஆயுர்வேதிக் கதாவை மட்டும் 4 முறை எடுத்துக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author: sivapriya