கொரோனா சிகிச்சைக்கு நிதி திரட்டும் உலக ஓவிய கண்காட்சி: பிராண்ட் தூதராக நடிகர் பொன்வண்ணன்

கொரோனா நிவாரண நிதி திரட்டுவதற்க உலக ஓவியர்கள் ஒன்றிணைந்து ஆன்லைன் மூலம் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சியின் பிராண்ட் தூதராக நடிகரும் ஓவியருமான பொன்வண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுக்க நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நம் தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் நிதியளித்து வருகிறார்கள்.

image

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு நிதி திரட்ட  உலகெங்குமுள்ள பிரபலமான ஓவியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆன்லைன் ஓவிய கண்காட்சியை நடத்த  சிங்கப்பூரை சேர்ந்த ’மனித நேயங்கள்’ அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். பிரபல ஓவியரும், நடிகருமான பொன்வண்ணன் இதன் பிராண்ட் தூதராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஓவியங்கள் விற்று கிடைக்கும் பணத்தை இந்தியாவில்  கொரோனா மருத்துவ செலவுக்காக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Author: sivapriya