`ஆண் குழந்தை பிறந்துள்ளது; எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம்` – ஸ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தெலுங்கு,இந்தி என இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேஷா கோஷல்  கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்டார்.

image

கடந்த மார்ச் 4 ஆம் தேதி தான்  கர்ப்பம் தரித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு  இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்விட்டரில், `கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி` எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author: sivapriya