சென்னை: மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி

சென்னை தாம்பரம் அருகே கொரோனா தொற்று நோயாளிக்கு ஆக்சிஜன் தர மறுத்ததால் அவர் மருத்துவமனை மேல்தளத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

கொரோனா பாதித்த ராஜேந்திரன் என்பவருக்கு சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், ராஜேந்திரனை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. ஒரு இரவு மட்டும் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுவிட்டு, உறவினர்கள் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வந்த செல்போன் அழைப்பில், ராஜேந்திரன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் விசாரித்தபோது, அவர் மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். ஆக்சிஜன் வழங்காததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya