புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழந்த பெண்களின் நகைகள் காணாமல் போனதாக புகார்

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்களின் நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த விக்டோரியா என்பவர், ஜிப்பர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொரோனா வழிகாட்டுதலின்படி விக்டோரியாவின் உடலை பேக்கிங் செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயின் மாயமானதைக் கண்டு அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Facebook Comments Box
Author: sivapriya