மைசூரு: ஏரி அருகே இறந்து கிடந்த 3 சிறுத்தைகள்; வனத்துறை விசாரணை

கர்நாடகா மாநிலம் மைசூருவில் 3 சிறுத்தைகள் சடலமும், அதன் அருகே பாதி சாப்பிட்ட நிலையில் தெருநாயின் உடலும் கிடந்தது.

மைசூருவில் பெலவாடி ஏரி அருகே உள்ள தனியார் பண்ணையில் மூன்று சிறுத்தைகள் இறந்து கிடந்ததாக கர்நாடக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் 4-5 வயதுடைய ஒரு பெண் சிறுத்தை, 8-10 மாத வயதுடைய இரண்டு சிறுத்தை குட்டிகள் அடக்கம். இந்த சிறுத்தை உடல்களின் அருகே பாதி சாப்பிட்ட நிலையில் ஒரு தெருநாயின் சடலமும் கிடந்தது. இந்த உடல்களை ஆய்வு செய்த மைசூருவின் வனத்துறை அதிகாரி கே.சி.பிரசாந்த் குமார், சிறுத்தைகள் எப்படி இறந்தன என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Facebook Comments Box
Author: sivapriya