எமிலியா ரோமாக்னா ஓபன் தொடர்: சாம்பியன் பட்டத்தை வென்றார் 17 வயது வீராங்கனை

இத்தாலியின் பாரமா நகரில் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 17 வயது வீராங்கனை கோகோ காப்.

74 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதி போட்டியில் சீன வீராங்கனை வாங் கியாங்கை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார் காப். ஒற்றையர் பிரிவில் அவர் வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது. முதல்முறையாக களிமண் ஆடுகளத்தில் அவர் வென்றுள்ள பட்டம் இது. 

இதேபோல இரட்டையர் சுற்று பிரிவு இறுதி போட்டியிலும் சக நாட்டு வீராங்கனையான கேத்ரின் மெக்நலியுடன் விளையாடி அதிலும் சாம்பியன் பட்டத்தை காப் வென்றுள்ளார். 

“இந்த ஒரு வாரமாக நான் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வது குறித்து தான் எண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் அரையிறுதிக்குள் நுழைந்த பிறகு என்னால் முடியும் என்ற நம்பிக்கை பிரகாசமானது. எனது இலக்கை நான் அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என காப் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya