உத்தராகண்ட்: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்; 5% இடஒதுக்கீடு

உத்தராகண்டில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் திரத்சிங் ராவத் அறிவித்தார்.  

உத்தராகண்ட் மாநிலத்தில் கோவிட் -19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 21 வயதை எட்டும் வரை அவர்களின் பராமரிப்பு மற்றும் கல்வியை மாநில அரசு கவனித்துக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்தார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை மற்றும் மாநில அரசு வேலைகளில் 5% இட ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Facebook Comments Box
Author: sivapriya