’நான் பிறந்த இந்திய நாட்டிற்கு எதிராக விளையாடுவதை எண்ணி சிலிர்க்கிறேன்’- நியூ. விரர் அஜாஸ்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தான் பிறந்த இந்திய நாட்டுக்கு எதிராக விளையாடுவது தன்னை சிலிர்க்க செய்வதாக தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல்.

வரும் ஜூஸ் 18 அன்று நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி விளையாட உள்ளன. இந்நிலையில் தான் இதனை தெரிவித்துள்ளார் அஜாஸ் பட்டேல். 

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவது எண்ணி நான் மெய் சிலிர்க்கிறேன். நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடான இந்தியாவுடன், அதுவும் நான் பிறந்த நாட்டுடன், எனது தாய் நாடான நியூசிலாந்துக்கு அணிக்காக விளையாடுவது அற்புதமான அனுபவம்” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளது. நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. 

Author: sivapriya