செப்டெம்பர் மாதத்துக்கு பின் +2 பொதுத்தேர்வு? – மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

செப்டம்பர் மாதத்துக்குபின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாம் என மாநில அரசுகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆலோசனையில் மாநில அரசுகள் கருத்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தவேண்டும் என்பதில் பெரும்பாலான மாநிலங்கள் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேர்வுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவும் பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

Author: sivapriya