“ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023க்கு ஒத்திவைப்பு!” – ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

அடுத்த சில மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு நடத்த சாத்தியம் இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். 

கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 2023க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022இல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வரும் 2023க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

image

கடைசியாக 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடர் நடைபெறும். 

Author: sivapriya