மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் – அமைச்சர் பொன்முடி

நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்க்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு பற்றி அமைச்சர் பொன்முடி புதிய தலைமுறைக்கு கொடுத்த தகவலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியபோது, கருணாநிதி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது நுழைவுத்தேர்வை ரத்துசெய்தோம். ஆனால் நீட் தேர்வு குறித்து தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya