உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.75 கோடியாக உயர்வு

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.75 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,75,16,369 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,85,85,994 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 78 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,54,52,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,982 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 3,38,96,660, உயிரிழப்பு – 6,04,087, குணமடைந்தோர் – 2,75,02,255
இந்தியா – பாதிப்பு – 2,67,51,681, உயிரிழப்பு – 3,03,751, குணமடைந்தோர் – 2,37,20,919
பிரேசில் – பாதிப்பு – 1,60,83,573, உயிரிழப்பு – 4,49,185, குணமடைந்தோர் – 1,44,92,167
பிரான்ஸ் – பாதிப்பு – 56,03,666, உயிரிழப்பு – 1,08,596, குணமடைந்தோர் – 51,99,310
துருக்கி – பாதிப்பு – 51,86,487, உயிரிழப்பு – 46,268, குணமடைந்தோர் – 50,24,313

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா – 50,01,505
இங்கிலாந்து – 44,62,538
இத்தாலி – 41,92,183
ஜெர்மனி – 36,54,201
ஸ்பெயின் – 36,36,453
அர்ஜெண்டினா- 35,39,484
கொலம்பியா – 32,32,456
போலந்து – 28,65,622
ஈரான் – 28,32,518
மெக்சிக்கோ – 23,95,330

Facebook Comments Box
Author: sivapriya