சென்னை: சுமார் 300 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கை

சென்னையின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 300 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கை நடக்கிறது.

முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நிலையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடையாள அட்டை சரிபார்ப்புக்குப்பின் அத்தியாவசிய பணிக்கு அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம், பால் வினியோகம் தவிர இதர வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஊரடங்கு விதியை மீறிய வாகன ஒட்டிகளிடம் 600 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது; வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது.

தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

Facebook Comments Box
Author: sivapriya