போர் விமானத்தை அனுப்பி பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ்..!

மின்ஸ்க்,

கிரீஸ் தலைநகர் ஏதன்சிலிருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸுக்கு ரையன் ஏர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது போர் விமானத்தை அனுப்பி தலைநகர் மின்ஸ்க் நகரில் பெலாரஸ் தரையிறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிரான விமர்சகரை கைது செய்யத்தான் இப்படி ஒரு பகீர் சம்பவத்தை பெலாரஸ் அரசு நடத்தியுள்ளது.

பத்திரிகையாளரும் அரசுக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிசை தேடப்படும் நபராக பெலாரஸ் அறிவித்து அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வந்தது. போலந்த் நாட்டில் இருந்த புரோடேஸ்விஸ் விமானத்தில் பயணிப்பதை அறிந்த பெலாரஸ் FR4978- விமானத்தை தனது வழக்கமான பாதையில் இருந்து திருப்பி மின்ஸ்க் நகரில் தரையிறங்க வைத்து, புரோடேஸ்விச்சை கைது செய்துள்ளது.

பெலாரஸ் அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெலாரஸ் அரசின் செயல் விமான கடத்தல் சம்பவம் என்றும் அரச பயங்கரவாதம் எனவும் சர்வதேச தலைவர்கள் விமர்சித்துள்ளனர். புரோட்டசெவிஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது

Author: sivapriya