பொதுமுடக்கம்: திருச்சியில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன போக்குவரத்து

முழு பொதுமுடக்கத்தை பொருட்படுத்தாமல் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமளவுக்கு ஏராளமான வாகனங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தே உள்ளது. ஆனால், திருச்சியில் சாதாரண நாட்களைப்போல் வாகனங்கள் அணிவகுத்து சென்ற வண்ணம் உள்ளன. திருச்சி நீதிமன்ற சாலையில் இருந்து அரசு பொது மருத்துவமனை செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ள போதிலும் வாகன போக்குவரத்து குறையவில்லை. இ பதிவுடன் செல்வோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் காவல்துறையினர், அனாவசியமாக வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya