பசியால் தவித்த நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் சரக டிஐஜி

பழனி அருகே உணவின்றி சுற்றித்திருந்த 500 நரிக்குறவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உணவு பொட்டலங்களை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கை விதித்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

குறிப்பாக பழனி அருகே பெத்தநாயக்கன் பட்டியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பதாக திண்டுக்கல் சரக டிஐஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தன்னார்வலர்களின் உதவியோடு சுமார் 500 சாப்பாடு பொட்டலங்களை தயார் செய்து, அதை உணவின்றி தவித்தவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார்.

Facebook Comments Box
Author: sivapriya