”கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்!” -கவுண்டமணி

”கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்” என்று நடிகர் கவுண்டமணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.  ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே தினசரி பாதிப்பு 35 ஆயிரத்திற்கு மேல் கடந்துகொண்டிருக்கிறது. தினசரி இறப்பாக 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள். இதில், இணை நோய் இல்லாதவர்களும் அதிகளவில் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

image

அதோடு, ஆக்சிஜன், படுக்கை, மருந்து போன்றவை கிடைக்காமல் மருத்துவமனை வளாகத்தின் வெளியிலேயே காத்துக்கிடக்கும் அவல நிலையிலும் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அரசு தரப்பிலும் பல துறை சார்ந்த பிரபலங்களும் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்” என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Author: sivapriya