இந்தியா: கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மக்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக கண்டறியப்பட்டது. தமிழகம், புதுச்சேரி என பெரும்பாலான மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளை பூஞ்சை நோயும் சில மாநிலங்களில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது வெள்ளை மற்றும் கருப்பு பூஞ்சை நோயை காட்டிலும் மிகவும் அபாயகரமான நோயாக அறியப்படுகிறது. 

சோம்பல், பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு ஆகியவை இந்த மஞ்சள் பூஞ்சை நோயின் அறிகுறிகளாக சொல்லப்பட்டுள்ளது. சில நோயாளிகளுக்கு இந்த பூஞ்சையினால் சீழ் வடிவது, காயம் குணமடைய காலம் பிடிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்களில் பாதிப்பு வரை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாம். 

இந்த மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் முறையான சிகிச்சை பெற்றால் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் எனவும் மருத்துவர்கள் சொல்கின்றனர். 

image

Amphotericin B மருந்து தான் இந்த நோயை குணப்படுத்தும் ஒரே மருந்து என சொல்லப்பட்டுள்ளது. சுத்தமில்லாத சுற்றுப்புற சூழல் தான் இந்த நோய் பாதிப்பு ஏற்பட காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya