கொரோனா 3-ஆவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை: எய்ம்ஸ்

நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என பரவும் தகவலில் உண்மை இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் அலையின்போது உலகம் முழுவதும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினர், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மூன்றாவது அலை ஏற்பட்டால், குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்திருக்கும் சூழலில் மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என குழந்தைகள் நல மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். 

மூன்றாவது அலை குழந்தைகளை நிச்சயம் பாதிக்காது என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author: sivapriya