முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து வழங்கி ஊக்குவித்த உதயநிதி

கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி முறையாக முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவது, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்வது என உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். இந்த நிலையில் நடேசன் சாலை பகுதியில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி முறையாக முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்-சிறுமியரை ஊக்கப்படுத்தும் வகையில் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்கினார்.

மேலும் அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள இரவு நேர நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்கள், அரவணைப்பகத்தில் ஆய்வு செய்து அங்கு தங்கியுள்ளவர்களுக்கு நேற்றிரவு உணவு அளித்தார். 

Facebook Comments Box
Author: sivapriya