பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு புழல் சிறை

பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை, புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதாகவும் நேற்றைய தினம் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில், பலமுறை இவரின் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, புகார்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

image

தொடர்ச்சியான அழுத்தங்களை தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 8 ம் தேதி வரை அவரை புழல் சிறையில் அடைக்க, எழும்பூர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya