நரிக்குறவ குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய பிரம்மரிஷி மலை அறக்கட்டளை

பெரம்பலூர் அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை பிரம்மரிஷி மலை தவயோகி தவசி சுவாமிகள் வழங்கினார்.

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அமைந்துள்ள பிரம்மரிஷி மலை மகாசித்தர்கள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த மலையப்ப நகர் நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. பிரம்மரிஷிமலை தவயோகி தவசி சுவாமிகள் கலந்து கொண்டு 150 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

image

image

சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது மருத்துவர் ராஜாசிதம்பரம் மற்றும் பிரம்மரிஷி மலை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya