புதுக்கோட்டை: வாடகைக்கு தண்ணீர் வாங்கி வந்து சாராயம் காய்ச்சிய நபர் கைது!

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்ச தண்ணீர் இல்லாததால் வாடகைக்கு தண்ணீர் வாங்கி  சாராயம் காய்ச்ச முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை மேலக்காட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்ச திட்டமிட்டுள்ளார். அங்கு தண்ணீர் வசதி இல்லாததால், வாடகைக்கு  டேங்கர் லாரி மூலம் தண்ணீரை கொண்டு சென்று, சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட தண்ணீர் டேங்கர், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya