ஆன்லைன் வகுப்பு – ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு?

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya