கடன் தவணை காலத்தை நீட்டிக்கக்கோரும் விஷயத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம்

மொரடோரியம் எனப்படும் கடன் தவணை காலத்தை நீட்டிக்கக்கோரும் விவகாரத்தில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா முதல் அலையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது, கடனுக்கான தவணையை 6 மாதத்திற்கு தள்ளி வைத்து ரிசர்வ் வங்கி மொரடோரியம் அறிவித்தது. கொரோனா 2-வது அலையிலும் பலர் வேலை இழந்துள்ளதால் மொரடோரியம் காலத்தை நீட்டிக்கக்கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என நினைப்பதாகவும், தேவையென்றால் ரிசர்வ் வங்கியிடம் இதுதொடர்பாக மனுதாரர் கோரிக்கை வைக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

Author: sivapriya