மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல்

விவசாயிகள் நலனுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் ஆறு மாதம் நிறைவுபெறும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள், உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முன்வராதது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும், விவசாயிகள் நலனுக்காக அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Author: sivapriya