கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டுவதற்கு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya