அரசு சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு வழங்க நிதி திரட்டும் நடிகை ஆண்ட்ரியா!

சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் முயற்சிக்காக நிதி திரட்டுகிறார் நடிகை ஆன்ட்ரியா!

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்தவாரம் வேளச்சேரியில் குருநானக் கல்லூரிக்கு சென்றிருந்தேன். அங்கு சென்னை காவல்துறையின் கமாண்டோ படையுடன் இணைந்து சென்னையின் 5 முக்கிய அரசு மருத்துவமனிகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு புதிதாக சமைத்த சுகாதாரமான உணவை வழங்கும் அருமையான முயற்சியை மேற்கொண்டு வருவதைப் பார்த்தேன்.

நம் சுகாதார பணியாளர்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை பராமரிப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்கள் மீதான அக்கறையை காட்ட நாம் அனைவரும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவேண்டும். இந்த முயற்சிக்கு நிதி திரட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போகிறேன். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya