பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படத்தில் துல்கர் சல்மான்

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான பால்கியின் த்ரில்லர் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

’சீனி கம்’, ’பா’, ’ஷமிதாப்’, ’கி அண்ட் கா’, ’பேட் மேன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநரும்  ’இங்கிலீஷ் விங்கிலிஷ்’, ’டியர் ஜிந்தகி’ படங்களின் தயாரிப்பாளரும் தமிழருமான பால்கி விரைவில் துல்கர் சல்மான் நடிக்கும் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார். இதன், அதிகாரபூர்வ அறிவிப்பை பால்கியின் பெரும்பாலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அந்தப் பதிவில், ”பால்கியின் உளவியல் சார்ந்த த்ரில்லர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறார். நான் அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறேன். ஆவலுடன் பணிகளைத் துவங்க காத்திருக்கிறேன்” என்று உற்சாகமுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் தனுஷும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya