புதுச்சேரியில் புதிய எம்எல்ஏக்கள் 24 நாட்களுக்குப் பிறகு பதவியேற்றனர்!

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்எல்ஏக்கள் 24 நாட்களுக்குப் பிறகு பதவியேற்றனர். நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் , பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 24 நாட்கள் ஆன நிலையில், தற்காலிக சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, புதிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழா, சபாநாயகர் அறையில் எளிய முறையில் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர், புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

Facebook Comments Box
Author: sivapriya