கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம்

கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை தரப்பில், “தேசிய அளவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டுள்ளது. மேலும், நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமீரகத்தில் 79% பேர் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதைக் கடந்த 80% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya