தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை: தென்கொரியா

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அரசுத் தரப்பில், “கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை போட்டுக் கொண்டால் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். செப்டம்பர் மாதத்துக்குள்ளாக 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திவிடத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya