இந்தியாவுக்கு நடப்பாண்டு இறுதிக்குள் 5 கோடி கரோனா தடுப்பூசி வழங்க முடியும்: அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தகவல்

நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியை வழங்க முடியும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்புமருந்துகள் இந்தியாவில் கடந்தஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20 கோடி பேருக்கு இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி' தடுப்புமருந்தும், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ஒரே கரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக் வி' ஆகும்.

Author: sivapriya