சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்வு

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன.

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் 95.06 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.95.28-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.89.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Author: sivapriya