அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் சக பணியாளர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள சான் ஜோஸ் என்ற இடத்தில் சாண்டா கிளாரா போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரிந்த வந்த அந்த ஊழியர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக பணியாளர்கள் மீது சரமாரியாக சுட்டார். இதில் 8 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக சான் ஜோஸ் பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது பெயர், என்ன காரணத்திற்காக சக பணியாளர்களை சுட்டுக்கொன்றார் என்பன போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Author: sivapriya