மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீதான கொலை வழக்கு: 8 சாட்சிகளிடம் விசாரணை

சக வீரரை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் குமார் வழக்கு தொடர்பான விசாரணையில் 8 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார்.

இப்போது சுஷில் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த சா்ட்சியங்கள் 8 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 8 பேரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Author: sivapriya