சென்னை: வெளிநாட்டினருடன் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

image

இந்நிலையில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஐயப்பன்தாங்கல், மௌலிவாக்கம், கோவூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். ஐயப்பன்தாங்கல் அரசு பணிமனை பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் சமூக விலகலோடு அமர்ந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

image

இதில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆச்சரியத்துடன் பொதுமக்கள் அவர்களை பார்த்தனர். மேலும் சிறுமி ஒருவர் பெற்றோர் கொடுக்கும் பணத்தை சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு கொடுத்ததாக அந்த சிறுமி தெரிவித்தார். சிறுமி கொடுத்த நிவாரண தொகையை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

Facebook Comments Box
Author: sivapriya