தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக உற்பத்தி தொடங்கப்படும். தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya