“மதுரையில் தீ போல கொரோனா பரவுகிறது” – அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

மதுரையில் தீ பரவுவது போல கொரோனா பரவுவதால், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய செல்லூர் ராஜு, மத்திய அரசோடு முரண்படாமல் இணக்கமாக சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Facebook Comments Box
Author: sivapriya