கொரோனா கால மகத்துவர்: ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கும் விதைகள் அறக்கட்டளை

குளித்தலையிலுள்ள விதைகள் அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்ற சுமார் 500க்கும் மேற்பட்டோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் பரவும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் குளித்தலையில் வசிக்கும் எழை எளிய மக்கள் பல்வேறு வகையிலும் சிரமப்பட்டு வருகின்றனர், இவர்களுக்கு உதவிடும் வகையில் விதைகள் அறக்கட்டளை முகநூல், வாட்ஸ்அப், மற்றும் சமூக ஆர்வலர்களிடம் உதவிகளை பெற்று தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அறக்கட்டளை நண்பர்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

image

தொடர்ந்து உணவு வேண்டி இவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கியும் வருகின்றனர், விதைகள் அறக்கட்டளையில் நிர்வாக இயக்குனர் சந்துரு அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டு சுமார் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கொண்டு இதுபோன்ற சேவைகளை செய்துவருவதாக கூறினார்.

Facebook Comments Box
Author: sivapriya