“கேள்வியையும் அதற்கான பதிலையும் நீங்களே எழுதுங்கள்” – மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கோவா ஐஐடி

வழக்கமாக தேர்வு என்றால் ஆசிரியர்கள் தயாரித்து கொடுக்கின்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிப்பார்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களையே தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்து, அதற்கான பதிலையும் எழுதிய சொல்லி உள்ளனர் கோவா ஐஐடி உயர்கல்வி கூட பேராசிரியர்கள். 

ANALOG CIRCUITS என்ற பாடத்திற்கான செமஸ்டர் தேர்வு வினத்தாளைதான் தயாரித்து, பதில் எழுத சொல்லி உள்ளனர் பேராசிரியர்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் வகையில் இந்த செமஸ்டர் முழுவதும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டடி மெட்டீரியல்ஸை கொண்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கான பதிலை இரண்டு மணி நேரங்களில் கொடுங்கள். இந்த பாடம் குறித்த புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நீங்கள் வடிவமைக்கும் கேள்வித்தாள் வெளிப்படுத்தி விடும். உங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து வினாத்தாளை நீங்கள் தயாரித்தால் அது உங்களது மதிப்பெண்ணை குறைக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

இரண்டாவதாக சொல்ல உள்ள விஷயம் நீங்கள் தயாரித்த கேள்விக்கு பதில் அளியுங்கள் என சொல்லப்பட்டுள்ளது. 


கல்வியை அனுபவித்து பயில வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி என பேராசிரியர்கள் சொல்லி உள்ளதாகவும் தெரிகிறது.  

Author: sivapriya